ரம்யாவை முதலிடத்திற்கு கொண்டு வந்த ’மாஸ்டர்’ விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு சுற்றுகள் நடைபெற்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற இரண்டு சுற்றுகளில் ரியோ முதலிடத்தில் இருந்த நிலையில் இன்று நடந்த இரண்டு சுற்றுகளில் முடிவில் ரம்யா முதலிடத்தை பிடித்துள்ளார்
முதலில் நடந்த முதுகில் உள்ள ஸ்டிக்கரை எடுக்கும் டாஸ்க்கில் முதலிடம் பிடித்து 7 புள்ளிகளை பாலா பெற்றார். அவரை அடுத்து ஷிவானி 6 புள்ளிகளையும், ரம்யா 5 புள்ளிகளையும், ஆரி 4 புள்ளிகளையும், சோம் 3 புள்ளிகளையும், கேபி 2 புள்ளிகளையும், மற்றும் ரியோ 1 புள்ளியையும் பெற்றனர். மூன்றாம் சுற்றின் முடிவில் பாலா முதலிட்த்தில் இருந்தார்
ஆனால் அடுத்து நடந்த மியூசிக்கல் சேர் போன்ற பாடல் போட்டியில் மியூசிக்கை கண்டுபிடித்து பல்லவியை பாட வேண்டும் என்ற டாஸ்க்கில் பாலா பலமுறை சரியான பாடலை கண்டுபிடிக்க முடியாமல் போனதால் அவருக்கு கடைசி இடமே கிடைத்தது
இந்த டாஸ்கில் ஆரி, ரம்யா, சோம் ஆகிய மூவரும் ஒரே புள்ளிகளை பெற்றதால் மூவருக்கும் வைக்கப்பட்ட டைபிரேக்கில் ரம்யா 7 புள்ளிகளை பெற்றதால் அவர் நான்கு டாஸ்க்கிலும் சேர்த்து மொத்தம் 20 புள்ளிகளை பெற்று முதலிடத்தை கைப்பற்றினார்.
கடைசி நேரத்தில் ரம்யாவுக்கு ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வந்தது என்பதும், அதனை சரியாக கண்டுபிடித்து முதலிடம் வருவதற்கு தளபதியின் ‘மாஸ்டர்’ பாடலே உதவி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுவரை நடந்த 4 டாஸ்க்குகளின் முடிவில் ஹவுஸ்மேட்ஸ் பெற்றுள்ள புள்ளிகளின் விபரங்கள்
ரம்யா: 20
ஷிவானி: 19
ரியோ: 19
பாலா: 17
ஆரி: 17
சோம்: 13
கேபி: 7
இன்னும் ஒரே ஒரு டாஸ்க் மட்டுமே இருப்பதாக கூறப்படும் நிலையில் சோம், கேபி தவிர மீதியுள்ள ஐவருக்கும் கடுமையான போட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com