கிடைக்குற கேப்பெல்லாம் யூஸ் பண்றாரே: ஆரியை கட்டம் கட்டிய ஷிவானி, ரம்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஆரியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் வீட்டுக்குள் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஆரி குறித்து கொஞ்சம் பலமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்
இன்றைய இரண்டாம் புரமோவில் ஆரி குறித்து ரம்யா மற்றும் ஷிவானி இது குறித்து பேசி வருகிறார்கள். அப்போது ரம்யா கூறும்போது ’ஆரி எல்லாமே சரியாக செய்ய வேண்டுமென்று நினைக்கின்றார். ஆனால் ஆடியன்ஸ்களுக்கு அது பிடிக்கிறதா இல்லையா என்பது என்னுடைய சந்தேகமாக உள்ளது. நேற்று கால் செய்தவர் கூறியதில் இருந்து ஆரியை மக்களுக்கு பிடிக்கின்ற மாதிரி எனக்கு எந்த கோணத்திலும் தோன்றவில்லை என்று கூறினார்
இதற்கு பதில் கூறிய ஷிவானி, ’அவருக்கு என்று வரும்போது தன்னலத்தோடு மற்றவர்களை குற்றஞ்சாட்டி அவர் தப்பித்து விடுகிறார்’ என்று கூறுகிறார். அப்போது ரம்யா ’கிடைக்கிற கேப்பில் எல்லாம் தன்னுடைய பலத்தையும் மற்றவர்களின் பலவீனத்தையும் ஆரி சொல்லி வருகிறார் என்று எனக்கு தோன்றுகிறது. எந்த கேப் கிடைத்தாலும் அதை யூஸ் பண்ணுகிறார் என்று ரம்யா கூறும் போது ’தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றவர்களை தப்பாக பேசுகிறார்’ என்று ஷிவானி கூறுகிறார்
ஆரியை கட்டம் கட்டியவர்கள் வெளியேறி கொண்டிருப்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் ரம்யா, ஷிவானி அவரை பற்றி பேசி வருவதால், பார்வையாளர்கள் இந்த வாரம் ரம்யா, ஷிவானியை கட்டம் கட்டி விடுவார்களோ என்று தான் இந்த புரமோவை பார்க்கும்போது எண்ண தோன்றுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments