நிஷாவுடன் ரமேஷை கோர்த்துவிடும் ரம்யா!

  • IndiaGlitz, [Wednesday,November 25 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வெளியே தெரியாமல் இருந்த குரூப்பிஸம் இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. குறிப்பாக கால் சென்டர் டாஸ்க்கில் பாலாஜி வெளிப்படையாக குருப்பிஸத்தை வெளியே ஓபன் செய்ததை அடுத்து அர்ச்சனா குரூப்புக்கு தர்ம சங்கடமாக உள்ளது
தாங்கள் குரூப் இல்லை என்பதை நிரூபிக்க போராடி வருகின்றார்கள். இதற்காக அவர்களுக்குள்ளேயே கால்செண்டர் டாஸ்க்கில் கால் செய்து அவர்களிடையே சண்டை போடுவது போல் நடித்து குரூப்பிஸம் இல்லை என்றும், அன்பை ஆயுதமாக வைக்கவில்லை என்றும் காட்ட முயற்சித்து வருகின்றனர். இவற்றின் ஒரு உதாரணம் தான் கேபி-சோம் கால்

இந்த நிலையில் அடுத்ததாக காலராக ரம்யாவும் கால் சென்டர் ஊழியராக ஜித்தன் ரமேஷும் உள்ளனர். அப்போது ரம்யா ரமேஷிடம் ’என்னை என்னை நாமினேட் செய்ய ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள்’ என்று கூற அதற்கு ரமேஷ் ’நீங்கள் ஒரு சைலன்ட் கில்லர் சிரிச்சே நீங்கள் ஊசி போட்டுவிடுவீர்கள் மேடம்’ என்று கூறுகிறார்

அதன்பிறகு நிஷாவை நாமினேட் செய்ய ஒரு காரணம் கூறுங்கள் என்று ரம்யா கேட்க, அதற்கு சிறிது நேரம் யோசித்த ரமேஷ் ’ஒருத்தரை நம்பியே அவங்க இருக்காங்க’ என்று கூறுகிறார். அந்த ஒருத்தர் யார் என்று நீங்கள் கூறுங்கள் என்று ரம்யா மீண்டும் கேட்பதுடன் மூன்றாவது புரமோ முடிவடைகிறது. ரமேஷ் இதற்கு பதிலாக அர்ச்சனாவை சொல்கிறாரா அல்லது ரியோவை சொல்கிறாரா என இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்