ஆரியின் மேல் ஆத்திரமடையும் நிஷா: மெல்ல மெல்ல வெளியே வரும் குரூப்பிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என அர்ச்சனா குரூப்பினர் சொல்லி கொண்டு வந்தாலும் அவ்வப்போது கமல்ஹாசனும் தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என சுட்டிக்காட்டி கொண்டு வந்தாலும் குரூப்பினர் திருந்துவது மாதிரி தெரியவில்லை.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் எதிர்பாராத வகையில் அன்பு குரூப்பிலேயே பிரச்சனை வருகிறது. ரியோ மற்றும் நிஷாவின் மீது அர்ச்சனா கோபப்படுவதால் அன்பு குரூப்புக்கு எதிரானவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதான்.

ஆனால் அந்த அன்பு குரூப்பை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றைய அடுத்த புரமோவில் ஜித்தன் ரமேஷுக்கு ஆதரவாக நிஷா பொங்குகிறார். ஆரியிடம் அவர் ரமேஷுக்கு ஆதரவாக மல்லுக்கட்டியபோது, ‘நான் ரமேஷை பற்றி கூறும்போது நிஷாவுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று கேள்வி எழுப்பிய ஆரி, ‘நிஷாவை பேச வேண்டாம் என நீங்கள் ஏன் கூறவில்லை என்றும் ரமேஷுக்கும் ஒரு கேள்வி எழுப்பி ஒரே நேரத்தில் இருவரையும் மடக்குகிறார்.

இதுவரை கொஞ்சம் மறைவாக இருந்த குரூப்பிஸம் தற்போது மெல்ல மெல்ல வெளியே தெரிய வருவதால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது