அடுத்த வாரம் செண்டிமெண்ட் மழை: தயாராகுங்கள் பிக்பாஸ் ரசிகர்களே!
- IndiaGlitz, [Saturday,December 26 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் போட்டியாளர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது போட்டியாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினர்களும் சென்டிமென்ட் மழையில் நனைந்து பார்வையாளர்களையும் கண்ணீர் மழையில் நனைய வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த போது ஒட்டு மொத்த பார்வையாளர்களும் கண்ணீர் மழையில் நனைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தெலுங்கு பிக்பாஸ் 4 சீசனில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த முறை உறவினர்களை நேரில் சந்திக்க விடாமல் கண்ணாடிக்கு அப்பால் நின்று சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை போட்டியாளர்களை காண வரும் உறவினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் எனவே அவர்கள் நேரில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
எனவே அடுத்த வாரம் சென்டிமெண்ட் மழையில் பார்வையாளர்களும் போட்டியாளர்களும் நனைவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது