நீதிமன்றமா? கருத்துக்கணிப்பு மன்றமா? சுசித்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சுசித்ரா, நீதிபதியா? அல்லது கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனத்தின் தலைவரா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு வருகிறது.

ஒரு வழக்கில் வாத பிரதிவாதங்கள் நடந்து, வாதத்தின் அடிப்படையிலும் சாட்சிகளின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்காமல் பார்வையாளர்களை கையை தூக்க வைத்து யாருக்கு அதிகமானோர் கையை தூக்குகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் சுசித்ராவை கோமாளி நீதிபதி என்றே நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதுக்கு எதுக்கு விசாரணை, வாதம், முதலிலேயே கையை தூக்க சொல்லி தீர்ப்பு அளித்து விடலாமா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது

சுசித்ராவுக்கு தனது மனதில் சேஃப் கேம் ஆடுவதாக நினைப்பு. தனது தீர்ப்பால் ஏதாவது பிரச்சனை வந்தால் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தான் தீர்ப்பளித்தேன் என்று கூறி தப்பித்து கொள்ளலாம் என்பதுதான் அவரது எண்ணமாக இருக்கலாம். ஆனால் அவரது இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் எத்தனை பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை அவர் வெளியே வந்த பின்னர் புரிந்து கொள்வார்

ஒருதலை பட்சமாக அவர் தீர்ப்பு வழங்குவது போட்டியாளர்களுக்கே வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அர்ச்சனா கூட அவரது தீர்ப்பை விமர்சனம் செய்து சுசித்ராவுக்கு எதிராக ஒரு குரூப்பை திரட்ட ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே ஒருசில தீர்ப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை தைரியமாக கூறியுள்ள கமல்ஹாசன், சுசித்ராவின் தீர்ப்பை வைத்து தரமான சம்பவத்தை இவ்வார இறுதியில் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பார்வையாளர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாகவே தெரிகிறது