சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய கால் சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் சம்யுக்தா காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சனம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறிய சம்யுக்தா, ‘வளர்ப்பு சரியில்லை’ என்று கூறினார்
வளர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சம்யுக்தா பேசியதை அடுத்து, டாஸ்க் முடிந்ததும் ஆரி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வளர்ப்பு சரியில்லை என்று நீங்கள் எப்படிக் கூறலாம்? என்றும் அது தனது பெற்றோர்களை குறிக்கும் என்றும் தனது பெற்றோர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
இந்த கேள்வியை திசைதிருப்பும் வகையில் ‘என்னுடைய தாய்மையை பற்றி நீங்கள் தவறாக பேசினீர்கள்’ என்று சம்யுக்தா கூறி பிரச்சனையை ஆரிக்கு எதிராக திருப்பினார். உண்மையில் ஆரி, ‘18 வயது பையனுக்கு உள்ள மெச்சூரிட்டி குழந்தை பெற்ற ஒருவருக்கு இல்லை’ என்று அவருடைய வயதை குறிப்பிட்டு தான் கூறினார். ஆனால் சம்யுக்தா அதனை ‘தன்னுடைய தாய்மையை இழிவு செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு வழக்கம்போல் அவருடைய குரூப்பில் உள்ளவர்களும் ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படத்தை பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற டாஸ்க் முடிந்த்து, ஆரியை சம்யுக்தா ‘ஒரு பொண்ணுகிட்ட பேச தெரியலை, இவனெல்லாம் வந்துட்டான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று கூறுகிறார். இதிலிருந்தே சம்யுக்தாவின் வளர்ப்பை தெரிந்து கொள்ளலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
— உங்கள் நண்பன் (@Ba00681836) November 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com