ஒரே திரையில் தமிழ், தெலுங்கு பிக்பாஸ்: கமல் பிறந்த நாள் ஸ்பெஷல்!

மக்களின் பேராதரவுடன் தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தெலுங்கு பிக்பாஸ் ஆரம்பித்து விட்டது என்பதும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் அவரை கவுரவிக்கும் வகையில் கமல்ஹாசன் மற்றும் நாகார்ஜூனா ஆகிய இருவரும் ஆன்லைன் மூலம் திரையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன.

ஒரே திரையில் கமல்ஹாசன், நாகார்ஜூனா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் இருக்கும் இந்த கண்கொள்ளா காட்சியை இன்று இரு மாநில ரசிகர்களும் ரசிக்கலாம். கமல்ஹாசனுக்கு நாகார்ஜுனா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளும், தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த காட்சிகள் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.