சுரேஷ் பதிவு செய்த மர்மமான டுவீட்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் திங்கள்கிழமை முதல் எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். நேற்று சனம், வேல்முருகன், ஆஜித் ஆகியோர் புதிய விருந்தினராக வந்துள்ளனர் என்பதும் இன்று காலை வெளியான முதல் புரமோவில் அனிதா வந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடைசியாக எவிக்ட் ஆன ஷிவானி வரும் காட்சி இரண்டாவது புரமோவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் வராமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் ஏராளமானோர் ’நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே செல்லவில்லை தாத்தா’ என்று அன்புடன் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு அவ்வப்போது புதிராக பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி நேற்று கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல அழைப்பு வந்திருப்பது போன்று கூறியதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் சற்று முன்னர் பதிவு செய்த டுவிட்டில், ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே! என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது’ என்று மர்மமான ஒரு ட்வீட்டை பதிவு செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. இந்த பாடலை அவர் செய்ததில் இருந்து பார்க்கும்போது சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பில்லை என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
ஏற்கனவே ஆரி மற்றும் பாலாஜி முதல் புரமோவில் இல்லாதது பெரும் சந்தேகத்தை கிளப்பி உள்ள நிலையில் சுரேஷின் டுவிட்டையும் வைத்து பார்க்கும்போது ‘ஏதோ பிக்பாஸ் வீட்டில் மர்மமாய் நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது’ என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Unnume puriyale ulagathile , ennamo nadaggudhu marmamaai irukkudhu....
— Suresh Chakravarthy (@susrisu) January 13, 2021
......
Super song
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com