மைக்கை கழட்டிய விவகாரம்: வெளியேற்றப்படுகிறாரா அர்ச்சனா?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தனக்கென 6 பேர்களை ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு செய்யும் ஆதிக்கம் குறித்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் எரிச்சலைத் தருகிறது. மேலும் அன்பு என்ற போர்வையில் அவர் செய்யும் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பார்வையாளர்கள் பலர் கமல்ஹாசனிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும் பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகியோர்களுக்கு குறும்படம் போட்டு அவர்களுடைய தவறை திருத்திய கமல்ஹாசன் அர்ச்சனா செய்து வரும் தவறுகளையும் சுட்டிக்காட்டி குறும்படம் போட வேண்டும் என்றும் பார்வையாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அர்ச்சனாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் கமல்ஹாசன் இரண்டாவது புரமோவில் பேசுகிறார்.

இன்றைய இரண்டாவது புரமோவில் ’எல்லோரும் மைக்கை சரியாக மாட்டி இருக்கின்றீர்களா? என்று கேள்வி கேட்டப்போது, அர்ச்சனா பயங்கர நடிப்புடன் தனது மைக்கை சரி செய்கிறார். அப்போது கமல்ஹாசன், அவ்வப்போது மைக்கை கழட்டி வைத்து விடுகிறார்கள். ஆனால் அர்ச்சனா மைக்கை கழட்டி வைப்பது வேறுவிதமாக எனக்கு இருக்கிறது என்று கூறியபோது ’ஒன்றுமே தெரியாத அப்பாவியாக அர்ச்சனா ’நான் எப்போ சார் மைக்கை கழட்டி வைத்தேன். மைக்கை கழட்டி வைக்கவே இல்லை’ என கூற கமலஹாசன் தனக்கே உரிய நக்கலான பார்வையுடன் ’ஆகா’ என கூறுகிறார்.

சோம் சேகர், நிஷாவிடம் பேசும்போதும், ஷிவானியுடன் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது மைக்கை கழட்டி வச்சிட்டு பேசினீர்கள் என்று கூற அப்போது அனிதா சிரிக்கிறார். இதனை அடுத்து கமல்ஹாசன், ‘அனிதா நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்ன? என்று கேட்க அனிதா வெட்கத்துடன் ஏதோ சொல்ல முயல்கிறார்.

இதனையடுத்து கமல்ஹாசன் ’மைக்கை கழட்டி வைப்பது என்பது ஒரு விதிமீறல். இந்த விதியை மீறியவர்களை இதற்கு முன்னாடி வெளியில் கூட அனுப்பி உள்ளோம் என்றும் கமல்ஹாசன் கூற, அர்ச்சனா தலையில் கைவைத்து சோகமாக உட்கார்ந்திருக்கிறார்.

இதனையடுத்து மைக்கை கழட்டி வைத்து விதிமுறையை மீறிய அர்ச்சனா வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.