அர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஏகப்பட்ட பஞ்சாயத்தை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கமலஹாசன் லேசாக சாட்டையை சுழற்றி உள்ளதாகவே தெரிகிறது
முதலில் நிஷாவிடம் உங்கள் விளையாட்டை மட்டும் விளையாடுங்கள் என்றும் வேறு ஒருவர் வெற்றி பெறுவதற்காக நீங்கள் ஏன் விளையாட வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஆடியன்ஸ் ஆகவே இருந்திருக்கலாம் என்றும் லேசாக குட்டு வைத்தார்
அதன் பின்னர் அர்ச்சனா குரூப் குறித்து பாலாஜி கூறியதை முழுமையாக கமலஹாசன் ஏற்றுக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் குரூப் இருப்பதால் அந்த குரூப்பில் உள்ளவர்கள் மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்யும் போது ஒருவரை டார்கெட் செய்கிறார்கள் என்றும் அதேபோல் அவர்களுக்குள் நாமினேட் செய்வதில்லை என்றும் பாலாஜி கூறியதை கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது
மேலும் அன்பு என்பதை தான் எதிர்க்கவில்லை என்றும் அன்பு தேவை தான் என்றும் ஆனால் அதே நேரத்தில் அன்பை கேமுக்குள் காட்ட வேண்டாம் என்று தான் கூறுகிறேன் என்றும் பாலாஜி கூறியதை கமல் ஆமோதித்தார். இதுவொரு குழு விளையாட்டு இல்லை என்றும் தனித்திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு என்றும் அர்ச்சனாவுக்கு கொஞ்சம் அழுத்தமாகவே கூறினார்.
அர்ச்சனா தரப்பில் தாங்கள் குரூப் இல்லை என்று கூறப்பட்டாலும் கமல்ஹாசனே அவ்வப்போது அர்ச்சனா குரூப் என்று கூறி அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் இருப்பதை உறுதி செய்தார். ஒரு கட்டத்தில் அர்ச்சனா, ‘சார் நீங்களாவது குரூப் என்று சொல்வதை நிறுத்துங்கள்’ என்று கோரிக்கை விடுத்தார்
அர்ச்சனா குரூப்பை சுட்டிக்காட்டிய கமல், அதே நேரத்தில் பாலாஜி தரப்பிலும் ஒரு குட்டி குரூப் இருக்கிறது என்று கமல் கூறியபோது பாலாஜியின் முகம் சுருங்கியது. இருப்பினும் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
மொத்தத்தில் நேற்று கமலஹாசன் லேசாக சாட்டையை சுழற்றி உள்ளார் என்பதும் இன்று சம்யுக்தா விவகாரத்தில் அந்த சாட்டையை கொஞ்சம் அதிகமாகவே சுழட்டுவார் என்றும் இரண்டு குறும்படங்களும் சம்யுக்தாவுக்காக போட்டு காண்பித்ததாகவும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments