'நீங்க அதெல்லாம் செய்விங்களா? அனிதாவை கலாய்க்கின்றாரா கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடலைபருப்பு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது என்பதும் அந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கேப்டன் பாலாஜி அதனை கையாண்ட விதம் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அனிதா பிடிவாதமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் கடலை பருப்பு விவகாரத்தில் மனம் புண்படும் வகையில் தான் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கேப்டனாக இருந்த பாலாஜி இறங்கி வந்தது அவரது மனிதாபிமான தன்மையை காட்டியதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கடலைப்பருப்பு விவகாரம் குறித்து கமல்ஹாசன் போட்டியாளர்கள் இடம் விசாரிக்கிறார். அப்போது பாலாஜி, தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அசால்ட்டாக இருந்தது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். அப்போது இது குறித்து விளக்கமளித்த அனிதா ’சாம்பாருக்கு தெரியாமல் கடலைப்பருப்பு ஊறப்போட்டு விட்டதால் அதை வடை அல்லது கூட்டு செய்து கொள்ளலாம் என்று தான் முடிவு செய்ததாகக் கூற அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் ’நீங்கள் அதெல்லாம் செய்வீர்களா’ என்று கலாய்த்தது அனிதாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்பது அவரது முக பாவனையில் இருந்து தெரிகிறது.

மொத்தத்தில் கமலஹாசன் ஏற்கனவே பலமுறை அனிதாவுக்கு அறிவுரை கூறி இருந்தும் தான் செய்த தவறை அவர் ஒப்புக்கொள்ளாமல் விளையாடி வருகிறார் என்பதும் ஒரு நல்ல போட்டியாளராக இருந்தும் அவரிடம் உள்ள இந்த சிறு குறை தான் அவரை இன்று வெளியேற்ற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!!

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவம் பயிலும் 64 வயது சாதனை மனிதர்… கூடவே இன்னொரு டிவிஸ்ட்!!!

ஒடிசா மாநிலத்தில் ஜெய்கிஷோர் பிரதான் என்பவர் 64 வயதில் மருத்துவம் படிக்கிறார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் அவரது இளைய மகளும் பல் மருத்துவம் படிக்கிறார்

ரஜினி, கமலுக்கு கூட்டம் வரும், ஆனால் ஓட்டு வராது: தமிழ் நடிகர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால்

செக்ஸ் பொம்மையுடன் திருமணம்… கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே… வருதத்துடன் பதிவு!!!

கடந்த நவம்பரில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு பாடிபில்டர், தான் பயன்படுத்தி வந்த செக்ஸ் பொம்மையை பலரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

வானிலை மட்டுமல்ல, இதிலும் நான் எக்ஸ்பர்ட் தான்: தமிழ்நாடு வெதர்மேனின் சரியான கணிப்பு!

துல்லியமான கணிப்பு: மற்றொரு துறையிலும் காலடி எடுத்து வைத்த தமிழ்நாடு வெதர்மேன்!வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள் தான்