பாசம் ரொம்ப பொங்கிருச்சு, பிக்பாஸில் அரசியல் இருக்குது: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் தற்போது தான் ஒரு சில போட்டியாளர்களுக்கு போட்டியே புரிய ஆரம்பித்துள்ளது. ஒருசில போட்டியாளர்கள் ஆரம்பம் முதலே தங்கள் தந்திரத்தை காட்டி வருகின்றனர். சில போட்டியாளர்கள் ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இப்போதுதான் மிங்கிள் ஆகி ரொமான்ஸூம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமலஹாசன் பேசுவதில் இருந்து இந்த வார பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அர்ச்சனா-பாலாஜி மேட்டர், அர்ச்சனா-ஆரி மேட்டர், அனிதாவின் புலம்பல்கள், சனம்ஷெட்டியின் சீண்டல்கள் ஆகியவை குறித்து சுவாரசியமாக கேள்வி எழுப்பி பதிலை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய புரமோவில், ‘உள்ளே ஒரு சினிமாவுக்கு வேண்டிய எல்லா கதம்பமும் இருக்கிறது. கொஞ்சம் நீளம் இருக்கு, மலர்ந்தும் மலராத காதல் இருக்கு, அம்மா, புள்ள சென்டிமென்ட் நிரம்பி இருக்கு, பாசம் சும்மா பொங்கிருச்சு, இதுக்கெல்லாம் உள்ள பூடகமாக ஒரு அரசியல் இருக்கு கவனித்தீர்களா? அரசியல் என்றால் மேடை வேண்டும், நின்று பேச வேண்டும் என்று கூறி முடிக்கிறார்.
மொத்தத்தில் கமல்ஹாசன் இன்று பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அரசியலுடன் சேர்ந்து நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day27 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/4KZrxCkNwe
— Vijay Television (@vijaytelevision) October 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout