எத்தனை முறை சொன்னாலும் புரியவில்லை: சாட்டையை சுழற்றுவாரா கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பார்வையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக கால் சென்டர் டாஸ்க்கில் ஒருசில போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அதிருப்தியில் இருக்கும் பார்வையாளர்களை திருப்தி செய்யும் வகையில் கமலஹாசன் இன்று சாட்டையை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் கமல்ஹாசன் ’மாற்றி மாற்றி பேசுவதையும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம். எதிர் கருத்து உடையவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு புரியவில்லை, என்ன செய்யலாம்' என்று கமல்ஹாசன் கூறுவதோடு இன்றைய புரோமோ முடிகிறது.

எனவே இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கண்டிப்பாக சாட்டையை சுழற்றுவார் என்றும் குறிப்பாக அனிதா மற்றும் பாலாஜிக்கு டோஸ் உறுதி என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.