கமலிடம் பல்ப் வாங்கிய ஆரி: சந்தோஷக்கடலில் ரம்யா!

  • IndiaGlitz, [Sunday,January 03 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்கள் முடிந்து இன்று 91வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் அந்த புகைப்படத்தில் உள்ள போட்டியாளரின் ஸ்டாட்டர்ஜி குறித்த கருத்தை கமல்ஹாசன் கேட்கிறார்.

அப்போது சோம்சேகருக்கு ஆஜித் புகைப்படம் வந்த நிலையில் ’ஆஜித்துக்கு கேம் பிளான் இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார். ஆரிக்கு ரம்யாவின் புகைப்படம் வந்த நிலையில் அவர் ரம்யாவின் ஸ்டாட்டர்ஜி பற்றி கூறாமல் வழக்கம்போல் என்றோ நடந்த ஒரு டாஸ்க் குறித்து கூற அப்போது இடைமறித்த கமல்ஹாசன் ’ஸ்டாட்டர்ஜி தாண்டி வேறு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறீர்கள்’ என்று குறிப்பிடுகிறார். இதனால் கமலிடம் பல்ப் வாங்கிய ஆரி சமாளிக்க முயற்சிக்கின்றார். கமல் ஆரியிடம் இப்படி ஒரு கருத்தை கூறியவுடன் ரம்யாவுக்கு சந்தோஷக்கடலில் மிதந்ததையும் பார்க்க முடிகிறது.

மேலும் ஆரி மீது போட்டியாளர்கள் அனைவரும் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு என்னவென்றால் ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் இன்னொரு போட்டியாளரை இழுத்து, தேவையில்லாத ஒரு சம்பவத்தையும் இழுத்து அவர்களுடைய குறைகளை மக்கள் மறந்திருந்தாலும் அதனை மீண்டும் மக்களுக்கு புரியும்படி ஞாபகப்படுத்துவார் என்பதுதான். அந்த குற்றச்சாட்டை இன்று கமல்ஹாசன் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரம்யாவுக்கு ரியோ புகைப்படம் வந்த நிலையில் ’ஒரு பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மேலோட்டமாக வேறொரு விஷயத்தை அவர் கையாள்வது போல் தெரிகிறது என்று கூறுகிறார்.

இந்த நிலையில் கடைசியாக பாலாஜிக்கு ஆரியின் புகைப்படம் வருவதும், ஆரி குறித்து பாலாஜி சொல்ல ஆரம்பிக்கும் காட்சியுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது. இதில் ஆரி குறித்து பாலாஜி என்ன சொல்லியிருப்பார் என்பதை அடுத்த புரமோவில் அல்லது இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

எதற்கு பயப்பட வேண்டும்? சாயிஷாவின் அற்புதமான விளக்கம்

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'கடைக்குட்டிசிங்கம்' 'ஜூங்கா' 'கஜினிகாந்த்' மற்றும் 'காப்பான்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாயிஷா

ஜிலேபி பேபி பாடலுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டிய பிக்பாஸ் தமிழ் நடிகை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையுமான யாஷிகா, ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான

எல்லாத்துக்கும் காரணம் இதுதான்: 'ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் சிம்புவின் எதார்த்தமான பேச்சு!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது இந்த விழாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரசிகர்கள் மத்தியில் சிம்பு மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும்,

தளபதியின் 'மாஸ்டர்' ரிலீஸ்: திரையரங்கு உரிமையாளர்களின் பார்வை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள்

மீண்டும் ஒருமுறை மன்னிப்பு: 'உண்மையா இது' என நெட்டிசன்கள் கேள்வி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, முதல் நாள் முதல் சக போட்டியாளர்களிடம் ஆவேசமாக பேசுவது, அதன்பின் கமல்ஹாசன் எபிசோடின்போது மன்னிப்பு கேட்பது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.