ரியோவின் முகத்திரையை கிழித்த கமல்ஹாசன்: குறும்படம் உண்டா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு குரூப்ப்பின் எல்லை மீறலை அவ்வப்போது நெட்டிசன்கள் குறும்படமாக போட்டு வெட்ட வெளிச்சமாக்கி வந்தார்கள் என்பது அறிந்ததே. ஆனாலும் கமல்ஹாசன் இதுவரை அந்த குரூப்பை கண்டுகொள்ளாமல் இருந்தது பார்வையாளர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் நேற்றும் இன்றும் அன்பு குரூப்பை கமல்ஹாசன் வச்சு செய்துவருவது பார்வையாளர்களுக்கு முழு திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேற்று அனிதாவுக்கு ஏற்பட்ட அநீதிக்கு குரல் கொடுத்து, நிஷா தான் மோசமான போட்டியாளர் என்று சிறைக்கு அனுப்பிய கமல்ஹாசன், இன்றும் அன்பு குரூப்பை வச்சு செய்து வருகிறார்.
குறிப்பாக ‘புதிய மனிதா’ டாஸ்க்கில் இடம்பெற்றிருந்த பாலாஜி மற்றும் அர்ச்சனா அணியை தனித் தனியாக உட்கார வைத்த அந்த கமல்ஹாசன், பாலாஜி உங்கள் டீமில் இருந்த யாராவது எதிரணிக்கு சாதகமாக விளையாடினார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா எனக் கேட்டபோது பாலாஜி அதற்கு ‘ரியோ ஒத்துழைக்கவில்லை என்று எனக்கு தோன்றியது மற்றும் நிஷா எங்கள் அணிக்கு எதிராக வேலை செய்ததாகவும் நான் கருதினேன் என்று கூறுகிறார்.
இதனை அடுத்து ஒரு தன்னிலை விளக்கம் கூற ரியோ முயற்சி செய்தபோது ’கார்டன் ஏரியாவில் கேப்ரில்லாவுக்கு நீங்கள் என்ன அட்வைஸ் சொன்னீர்கள், அவங்க உங்க அணி இல்லையே? என்று கேட்க ரியோவின் முகம் சுருங்குகிறது. மொத்தத்தில் ரியோவின் முகத்திரை கிழிகிறது என்பது உறுதியாகியுள்ளது.
நெட்டிசன்கள் பதிவு செய்த குறும்படத்தில் ’கேப்ரில்லா சிரித்து விட்டார், ஆனாலும் அதை நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்று ரியோ கூறினார் என்பதும் அர்ச்சனா அதெல்லாம் விடு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியது வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய நிகழ்ச்சியில் அந்த குறும்படத்தை கமலஹாசன் போட்டுக் காண்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Promo3 ??#BiggBossTamil #BiggBossTamil4 #BBTamilSeason4 #BiggBoss4
— ?? ᴍɪɴɪ ?? (@Kuttymaa_) December 13, 2020
Cresit ?? https://t.co/xXnIE0koBg pic.twitter.com/JI2n74Rv6r
Clear groupism this week, starting from #Archana saying she would have toppled #Aari for nominations (given the option) to #Rio trying to save #Gaby from the task. Will @ikamalhaasan sir question these tomorrow?#BiggBossTami4 #Aari #AariArjunan #Anitha pic.twitter.com/2GSU9FDOZE
— Aari Army (@AariArjunanArmy) December 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments