ரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கமல் ஒரு சில போட்டியாளர்களிடம் கேள்வியை எழுப்பி பதிலை பெற்றார் என்பதும், அமைதியாக இருந்த ஷிவானியை கூட பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் நேற்று ரம்யா வாயை திறக்கவே இல்லை என்பதும் அவர் நேற்றைய எபிசோடில் ஒரு வார்த்தை கூட பேச வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ரம்யாவை கமல் அதிக நேரம் பேச வைத்துள்ளார்

கால் சென்டர் டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷிடம் கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கினீர்கள் என்று கூறிய கமல், ஜித்தன் ரமேஷ் வெகு நேரம் தாக்கு பிடித்ததாகவும் பாராட்டு தெரிவித்தார். அதன்பின்னர் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கின்றதா? என கமல் கேட்க அவர் தனது கேள்விகளுக்கு தானே பதில் சொல்ல தொடங்குகிறார்

அர்ச்சனா எல்லோரையும் சகஜமாக மனவருத்தம் செய்துவிடுவார்கள் என்று கூறிய ரம்யா, ஒரு சில நேரத்தில் பாலாவுக்கு காதல் கண்ணை மறைக்குதோ என்று சந்தேகம் இருப்பதாக கூறினார். மேலும் கேபியை பற்றிக் கூறும்போது அவர் கொஞ்சம் அமைதியாக யோசித்தபோது கமல், ‘இப்பொழுது புரிகிறதா கேள்வி கேட்பது ரொம்ப ஈசி, பதில் சொல்வது எவ்வளவு கஷ்டம் என்று என்ன ரம்யாவையும் விட்டுவைக்காமல் கமல் கலாய்த்தது இன்றைய நிகழ்ச்சியின் வேற லெவல் அம்சம் ஆகும்

மொத்தத்தில் பாலாவின் ஆதரவாளராக இருக்கும் ரம்யாவையே பாலாவின் குரூப்பில் உள்ளவர்களை விமர்சனம் செய்ய வைத்து விட்டார் கமல் என்பதுதான் இன்றைய சிறப்பாக கருதப்படுகிறது