பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா? அர்ச்சனா குரூப் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வரும் வரை எந்தவித குரூப்பும் இல்லாமல் இருந்த நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு குரூப்பை வளர்த்து கொண்டார். அன்பு என்ற ஆயுதத்தை வைத்து தன்னுடைய குரூப்பின் உதவியால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதே அவரது ஸ்டேட்டர்ஜியாக உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக பாலாஜியும் ஒரு குரூப்பை சேர்த்துக் கொண்டு விளையாடி வருகிறார்

இந்த நிலையில் இந்த வாரம் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். ஆனால் டாப்பிள் கார்ட் அனிதாவுக்கு கிடைத்ததை அடுத்து அந்த கார்டை பயன்படுத்தி அவர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து தப்பித்துக் கொண்டார்

இந்த நிலையில் நேற்றுடன் வாக்கெடுப்பு முடிந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜித்தன் ரமேஷ் சுமாராக விளையாடினாலும் இந்த வாரம் கால் செண்டர் டாஸ்க்கில் ரம்யாவுடன் அருமையாக விளையாடினார் என்பதும், மக்கள் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என கூறி டாப்பிள் பாஸை முதலில் விட்டுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அர்ச்சனா குரூப்பில் உள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஜித்தன் ரமேஷ் ஒருவேளை வெளியேறினால் அவரது குரூப்பில் ஆட்குறைப்பு ஏற்படும் என்பதும் இதனால் அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி நிச்சயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்!

நிலக்கோட்டை அருகே டீக்கடை ஒன்றில் வாங்கிய வடையில் முழு பிளேடு இருந்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது 

விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பாதி படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன

மாலத்தீவில் மாஸ் போஸ்: சமந்தாவின் உச்சகட்ட கவர்ச்சி!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம்! 5 நிமிட வீடியோ வைரல்!

ஹாலிவுட்டில் புரூஸ்லி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் குறித்து வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

ரொம்ப கேவலமா இருக்கு: நிஷாவை கலாய்த்த ரியோ!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பினர் தனியாக இருக்கும்போது அவர்களுக்குள் சிரித்து விளையாடுவதும், ஜோக்கடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் அடித்த ஜோக்குகளுக்கு அவர்களே