பணப்பெட்டியை எடுத்துவிட்டு கதறி அழுத கேபி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி 6 போட்டியாளர்களில் யாராவது ஒருவர் ஐந்து லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகி விடலாம் என்று பிக்பாஸ் ஆப்ஷன் ஒன்றை அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் அந்த பெட்டியை எடுக்க யாரும் முன்வராத நிலையில் திடீரென அந்த பெட்டியை எடுக்க கேபி முன்வந்துள்ளார். இதனை அடுத்து ரியோ அவரிடம் பெட்டியை எடுக்க வேண்டாம் என்று கூற, ஆனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்னுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கேபி கூறுகிறார்
அப்போது ’நீ வீட்டிற்கு சென்றால் உன்னுடைய அம்மாவை மட்டும் தான் பார்க்க வேண்டும், ஆனால் நான் வீட்டிற்கு சென்றால் பார்க்க வேண்டிய நபர்கள் எத்தனையோ பேர் உள்ளனர் என்று ஆறுதல் கூறிய ரியோ, பெட்டியை வைக்க கூறுகிறார். ஆனால் என்னுடைய அம்மாதான் எல்லாம் என விடாப்பிடியாக பெட்டியை கையில் வைத்திருக்கும் கேபி கதறி அழும் காட்சிகளுடன் இன்றைய புரமோ முடிவடைகிறது
ஏற்கனவே கேபி தான் ரூ. 5 லட்சம் கொண்ட பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த புரமோ வீடியோவும் அதனை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com