பணப்பெட்டியை எடுத்துவிட்டு கதறி அழுத கேபி!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி 6 போட்டியாளர்களில் யாராவது ஒருவர் ஐந்து லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகி விடலாம் என்று பிக்பாஸ் ஆப்ஷன் ஒன்றை அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அந்த பெட்டியை எடுக்க யாரும் முன்வராத நிலையில் திடீரென அந்த பெட்டியை எடுக்க கேபி முன்வந்துள்ளார். இதனை அடுத்து ரியோ அவரிடம் பெட்டியை எடுக்க வேண்டாம் என்று கூற, ஆனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்னுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கேபி கூறுகிறார்

அப்போது ’நீ வீட்டிற்கு சென்றால் உன்னுடைய அம்மாவை மட்டும் தான் பார்க்க வேண்டும், ஆனால் நான் வீட்டிற்கு சென்றால் பார்க்க வேண்டிய நபர்கள் எத்தனையோ பேர் உள்ளனர் என்று ஆறுதல் கூறிய ரியோ, பெட்டியை வைக்க கூறுகிறார். ஆனால் என்னுடைய அம்மாதான் எல்லாம் என விடாப்பிடியாக பெட்டியை கையில் வைத்திருக்கும் கேபி கதறி அழும் காட்சிகளுடன் இன்றைய புரமோ முடிவடைகிறது

ஏற்கனவே கேபி தான் ரூ. 5 லட்சம் கொண்ட பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த புரமோ வீடியோவும் அதனை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஓட்டு போட்டது ரியோவுக்கு, வாழ்த்து தெரிவித்தது ஆரிக்கு: நட்சத்திர ஜோடியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரத்தில்

'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல்: எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் கெட்டப்!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் புதிய ஸ்டில்

பணப்பெட்டியை நோக்கி செல்லும் ஆரி: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பணப்பெட்டி ஆப்சன் கொடுக்கப்படும் என்பதும் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு

'முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா மாஸ்டர்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே.