ஆரியை ஐஸ் வைத்த கேபி அம்மா! எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு!

ஆரி மீது கை வைத்தால் அடுத்த வாரம் வெளியேற வேண்டியதுதான் என்பது தற்போது அனைவருக்கும் கிட்டத்தட்ட புரிந்துவிட்டது. இதனை ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர்களுடைய உறவினர்களும் அட்வைஸ் ஆக கூறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே நேற்றைய தினம் ரம்யாவின் அம்மாவும் சகோதரரும் வந்தபோது ரம்யாவுக்கு மறைமுகமாக கூறிய அட்வைஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கேப்ரில்லாவின் அம்மா உள்ளே வருகிறார். மகளை கட்டிப்பிடித்து சந்தோஷப்படும் கேபி அம்மா, ஆரியை பார்த்து, ‘உங்களை நான் ’நெடுஞ்சாலை’ படத்திலேயே பார்த்திருக்கிறேன் என்று கூறி ஐஸ் வைக்கிறார்.

அதன் பின்னர் கேபியுடன் அவர் தனியாக பேசும் போது ’நீ டாஸ்க் எல்லாம் நன்றாகத்தான் செய்கிறாய் ஆனால் ’குரூப்பாக பண்ணுகிறாய், உன்னுடைய தனித்தன்மையும் அதில் வெளிப்பட வேண்டும், அதற்கு முயற்சி பண்ணு’ என்று அவர் கூறுகிறார். அதற்கு கேப்ரில்லா ’நான் சரியாக டாஸ்க் பண்ணினாலும் ஒரு சிலர் என்னை மட்டம் தட்டுகின்றனர். அதனால் சண்டை போட்டு எதையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் அப்படியே விட்டு விட்டேன் என்று கேபி கூறுகிறார்

மொத்தத்தில் உறவினர்களின் அட்வைஸ் காரணமாக இனி ஆரியை யாரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது