டாஸ்க்கில் விட்டுக்கொடுத்த கேபி: பாலாஜி சொன்னது உண்மைதானா ?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் குரூப்பில் சோமசேகர், ரியோ மற்றும் கேபி இருப்பதாக நேற்று பாலாஜி சொன்னதை இன்றைய டாஸ்க்கில் கேபி மற்றும் சோம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் 

தற்போது கால்சென்டர் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் கால் சென்டர் ஊழியராக ஒவ்வொருவரும் காலராக ஒருவரும் பேச வேண்டும். இதில் கால்செண்டர் ஊழியரை வெறுப்பேற்றும் வகையில் பேசி அவரை போனை வைக்க செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க். 

நேற்று நடைபெற்ற இரண்டு உரையாடல்களான பாலாஜி-அர்ச்சனா மற்றும் சனம்-சம்யுக்தா ஆகியோரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார். பாலாஜியையும், சம்யுக்தாவையும் வெறுப்பேற்ற முடியாததால் அர்ச்சனா, சனம் இருவரும் அடுத்த வாரம் நாமினேட் ஆகினர்

இந்த நிலையில் இன்று சோம் மற்றும் கேபி போனில் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித போட்டியும் பரபரப்பும் இன்றி இருவரும் சிரித்துக்கொண்டே நண்பர்கள் போல் உரையாடினர். ஒரு கட்டத்தில் போனை வைத்து விடுங்கள் என்று சோம் சொல்ல உடனே கேபி வைத்துவிட்டார் போனை வைத்து விட்டதால் அவர் நாமினேட் செய்யப்படுகிறார் என்பதனை சனம் உள்பட ஒருசிலர் சுட்டிக்காட்டியபோது ’ஆமாம் நாம் தெரிந்து தான் வைத்தேன்’ என்று கேபி கூறினார்.

இதனை அடுத்து சனம்ஷெட்டியிடம் பாலாஜி கூறியபோது ’நேற்று நான் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. எப்ப பார்த்தாலும் பெஸ்ட் பிளேன்னு கொடுக்க ஒருகூட்டம் இருக்கு. அதனால் அவன் விளையாட மாட்றான்’ என்று சோம்சேகரை கூறுகிறார் பாலாஜி. வரும் நாட்களில் அர்ச்சனா குரூப்புக்கு எதிராக மற்ற போட்டியாளர்கள் ஒன்று கூடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'தளபதி 65' திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது 

இப்படி ஒரு போஸ் தேவையா? பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கவுதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக மாலத்தீவு சென்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி!!!

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும்

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை!!!

நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.