பிக்பாஸ் கேட்ட எளிய கேள்வி, ஹவுஸ்மேட்ஸ் திணறல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று, ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. கடந்த 80 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் பிக்பாஸ் ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விக்கு சரியான பதில் கூறுபவர்களுக்கு ஆக்டிவிட்டி ஏரியாவில் கிறிஸ்மஸ் பரிசுகள் காத்திருக்கும். அதில் எவ்வளவு பரிசுகளை வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று விதிமுறை வைக்கப்படுகிறது

இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் கேட்கும் கேள்விகளில் ஒன்று ’இந்த வீட்டில் எத்தனை நாள் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கேள்விகளை பிக்பாஸ் கேட்பதும் அதற்கு சிலர் ஹவுஸ்மேட்ஸ் திணறுவதும், சிலர் சரியான பதிலை கூறி ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு சென்று கிறிஸ்துமஸ் பரிசுகளை அள்ளிக் கொண்டு வருவதுமான காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளது.

ஒருசிலர் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு அதிக பரிசு பொருட்களை எடுத்ததும், அந்த பரிசுகள் கீழே விழுந்த காட்சிகளும் இந்த புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் காரணமாக சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது