அர்ச்சனாவுக்கு அனிதா ஆதரவு, பாலாவுக்கு ரியோ ஆதரவு: மாறுகிறதா கூட்டணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த பல வாரங்களாக அர்ச்சனாவின் அன்பு குரூப் டாமினேட் செய்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்த டாஸ்க்கில் அன்பு குரூப் சுக்கு நூறாகி விட்டது என்றுதான் கூறப்படுகிறது
கடந்த வாரம் அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேற்றப்பட்டதை அடுத்து அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் குறைந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் நடந்த கோழிப்பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா, ரியோ, சோம் மற்றும் கேபி ஆகியோர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டதால் கிட்டத்தட்ட அன்பு குரூப் உடைந்து விட்டதாகவே கருதப்பட்டது
இந்த நிலையில் தற்போது சிறந்த போட்டியாளர்கள் மற்றும் மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்யும் படலம் இன்று நடைபெறுகிறது. இதில் கடந்த வாரம் அர்ச்சனாவுடன் கடுமையாக மோதிய அனிதா, இந்த வாரம் அர்ச்சனாவை சிறந்த போட்டியாளர் என நாமினேட் செய்கிறார். அதேபோல் ரியோ, சோம் ஆகிய இருவரும் பாலாவை தேர்வு செய்கின்றனர். சோம் மற்றும் ரம்யாவை அர்ச்சனா தேர்வு செய்கிறார், பாலாஜி, ஷிவானியை தேர்வு செய்கிறார். எனவே இந்த வாரம் சிறந்த போட்டியாளர்களாக பாலா, அர்ச்சனா, சோம் தேர்வாக வாய்ப்பு உள்ளது என்பதும், அடுத்த வார தலைவர் போட்டிக்கு இவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் தெரிகிறது
அதேபோல் இந்த வார மோசமான போட்டியாளர்களின் தேர்வு இன்று நடக்கும். அர்ச்சனா, ரம்யா, அனிதா, கேபி உள்பட கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் மோதிய ஆரி, இந்த வாரம் ஜெயிலுக்கு போக அதிக வாய்ப்பு உள்ளது
#Day74 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Spu4O9MzKy
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments