நேற்று சிரிப்பு, இன்று அழுகை: ஹவுஸ்மேட்ஸ்களை அழவைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்கள் கடந்த 100 நாட்களில் கடந்து வந்த மகிழ்ச்சியான தருணங்களில் சில சில காட்சிகளை பிளாஸ்மா டிவியில் போட்டு காண்பிக்கப்பட்டது என்பதும் இந்த மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இன்றைய மூன்றாவது புரோமோ வீடியோவில் அதே பிளாஸ்மா டிவி யில் உணர்ச்சிமயமான செண்டிமெண்ட் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது என்பதும், அந்த காட்சிகளை கண்ணீருடன் ஹவுஸ்மேட்ஸ் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 நாட்களில் நடந்த மலரும் நினைவுகளை பார்த்து ஹவுஸ்மேட்ஸ்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீருடன் பாசப்பார்வை பார்த்துக் கொண்ட காட்சிகள் பார்வையாளர்களுக்கும் நெகழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாலாஜியும் அர்ச்சனாவும் அம்மா-மகன் என்ற உறவில் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதது, ஆரியின் கண்ணீரை பாலா துடைத்துவிட்டது, சிங்கப்பெண்ணே பாடலின்போது ரம்யா அழுதது ஆகிய காட்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.