பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை ஓட வைத்த பிக்பாஸ்: தடுக்கி விழுந்த பாலா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் பால் & கேட்ச் டாஸ்க்கில் நேற்று சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர். இந்த நிலையில் இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது
இன்றைய டாஸ்க்கில் பிளாஸ்மா டிவியில் தெரியும் பெயர் உள்ளவர்கள் உடனடியாக ஓடிச் சென்று பந்தை பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து சோம், பாலா, அனிதா, ரியோ, ஆஜித் என மாறி மாறி பிளாஸ்மா டிவியில் பெயர்கள் வர அந்த பெயருக்குரியவர்கள் பந்தை பிடிக்க ஓடுகின்றனர் இதில் ரம்யா, ரியோ, சோம் உள்பட ஒருசிலர் சரியாக பந்தை பிடித்து விடுகிறார்கள். ஆனால் பாலா பந்தை பிடிக்க ஓடிய போது தவறி விழுந்து கோட்டை விடுகிறார். ஏற்கனவே நேற்று அவர் தான் நிறைய பந்துகளை பிடிக்கும் வாய்ப்புகளை கோட்டை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் இந்த டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ்களை பிக்பாஸ் ஓடவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது. பாலா ஆர்வத்துடன் இந்த டாஸ்க்கை விளையாடியபோதிலும் அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமே
#Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/RqGgTX09J1
— Vijay Television (@vijaytelevision) December 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments