மன்மத ராசா.. லூசுப்பெண்ணே: காதல் ஜோடியை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் போட்டியாளர்களின் சண்டை சச்சரவு இருந்தபோதிலும் இன்னொரு பக்கம் பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் டிராக் தனியாக சென்று கொண்டிருக்கிறது.

பாலாஜி ஷிவானி ரொமான்ஸ் குறித்து மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன பேசினாலும் அதை இருவரும் கண்டு கொள்வதில்லை என்பதும் இருவரும் கர்மமே கண்ணாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பாலாஜியும் ஷிவானியும் அருகருகே உட்கார்ந்து ரொமான்ஸாக பேசிக்கொண்டிருக்கும் போது மற்ற போட்டியாளர்கள் அவர்களை பற்றிய பாடலை பாடுகின்றனர். ’மன்மதராசா’ பாடலையும் ’லூசு பெண்ணே’ பாடலையும் பாடி பாலாஜி-ஷிவானி காதலை ஹவுஸ்மேட்ஸ் வச்சு செய்த போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் ரொமான்ஸை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பொதுவாக பிக்பாஸ் சீசன்களில் தோன்று காதல் எல்லாம் சீசன் காதலாக இருந்து வரும் நிலையில் இந்த காதல் மட்டும் புனிதமானதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.