யாராவது ஒருத்தரவாது எனக்கு சப்போர்ட் பண்ணிங்களா? ஷிவானியிடம் கண்ணீர் விட்ட பாலா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன், பாலாஜியை வறுத்தெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சனம், பாலா மோதலின்போது பாலா தன்னைத்தானே செருப்பால் அடித்த விவகாரம் குறித்து இது ஒரு வயலன்ஸ் என்று கடுமையான வார்த்தையை கமல் பயன்படுத்தினார்.
அதேபோல் கேப்டன்ஷிப் டாஸ்க் குறித்து எழுந்த பிரச்சனைகளுக்கும் கமல்ஹாசன், குறும்படம் ஒன்றை போட்டு பாலாஜியை அசிங்கப்படுத்தினார். மேலும் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் என்று கூறியது பாலாஜியை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது
இதுகுறித்து இன்றைய புரமோவில் பாலாஜி ஷிவானியிடம் புலம்புகிறார். கமல்சார் மெண்டல் பிளாக் எனக்கு இருக்கின்றது என்று சொன்னபோது பாலாவுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று யாராவது எனக்கு சப்போர்ட் செய்தார்களா? அந்த நேரத்தில் நான் எந்த அளவுக்கு அதிகப்பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன் என்று பாலா கூறியபோது அவரது கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
சோம், மற்றும் அர்ச்சனா ஆகியோர் மைக்கை கழட்டி பேசியதற்கெல்லாம் குறும்படம் போடாத கமல், குரூப் என வெளிப்படையாக பச்சை குழந்தைக்கு கூட தெரியும் வகையில் விளையாடி வரும் அர்ச்சனா குரூப்புக்கு ஒரு குறும்படம் கூட போடாத கமல், ஒவ்வொரு வாரமும் பாலாஜியை மட்டும் டார்கெட் செய்வது பார்வையாளர்களும் சற்று அதிருப்தியை தருவதாக தெரிகிறது
New #Promo ?? #biggbosstamilgalatta #BBTamilSeason4 #BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBoss4 #BiggBossTamil#biggbossseason4 #பிக்பாஸ்
— ?? ᴍɪɴɪ ?? (@Kuttymaa_) December 9, 2020
Credit ??https://t.co/wFVWyNtiaV pic.twitter.com/J5qk73UQHi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com