கமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி!
- IndiaGlitz, [Saturday,October 24 2020]
பிக்பாஸ் வீட்டில் தினந்தோறும் நடக்கும் சண்டைகளில் ஒன்றாக அர்ச்சனா மற்றும் பாலாஜி சண்டையை எடுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் தானே முன்னின்று இருக்க வேண்டும் என்று நினைக்கும் அர்ச்சனாவை இதுவரை யாரும் எதிர்த்து பேசாத நிலையில் முதல் முறையாக பாலாஜி அவரை எதிர்த்துப் பேசுகிறார். அதுமட்டுமின்றி நீங்கள் தலைப்பட்சமாக செயல்படுகிறீர்கள் என்றும் உங்கள் பார்வையில் நியாயம் இல்லை என்றும் பாலாஜி தைரியமாக கூறுகிறார்
தன்னை முதன்முதலாக ஒருவர் குறை சொல்லி குற்றம் சாட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா, அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு பாலாஜியின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் அவரை குழந்தை என்றும் சின்ன பையன் என்றும் மற்றவர்களிடம் கூறி வருகிறார்
இதை பொறுத்துக்கொள்ள முடியாத பாலாஜி அதிரடியாக காயை நகர்த்துகிறார். இன்று கமல் முன்னிலையில் அவர் பேசும்போது ’இந்த வீட்டுக்குள் கேமராவிடம் இருந்து மட்டுமின்றி போட்டியாளர்களிடம் இருந்தும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றும், அமைதியாக இருந்தால் இவர் அமைதியாக இருக்கிறார் என்று சொல்லி குறை சொல்கிறார்கள் என்றும், அதையும் தாண்டி ஒரு கருத்தை கூறினால் நம்மை சின்னபையன் குழந்தை என்று சொல்லி பிராண்ட் செய்ய பார்க்கிறார்கள் என்றும், நேரடியாக ஒரு விஷயத்தை சொல்லாமல், மறைமுகமாக சொல்கிறார்கள் என்றும், இப்போதான் பிக்பாஸ் என்றால் என்ன என்று எனக்கு புரிகிறது என்றும் அர்ச்சனாவை போட்டு தாக்குகிறார்.
பாலாஜி சொல்லும் அனைத்துமே தன்னைப்பற்றியது என்று புரிந்து கொண்ட அர்ச்சனாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. ஆனால் அதை அவர் முகத்தில் வெளிக்காட்டாமல் புன்சிரிப்போடு சமாளித்து வரும் காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளது
#BiggBossTamil இல் இன்று.. #Day20 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/LGCAQaCA4w
— Vijay Television (@vijaytelevision) October 24, 2020