ஆரி டைட்டில் வின்னரா? பயத்துடன் பாலாஜி கூறியது இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் உறவினர்களின் வருகை குறித்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் குறித்து பாலாஜி ஆஜித்துடனும் ஷிவானியுடனும் பேசும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இறுதியில் இருந்தது.
ஆஜித்திடம் பாலாஜி பேசியபோது, ‘நான் மட்டும் டைட்டில் வின்னர் ஆக ஜெயித்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிரெண்டே மாறிவிடும் என்றும் இதுவரை கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தான் டைட்டில் வின்னர் ஆக பட்டம் பெற்றார்கள் என்றும் ஆனால் நானோ ஆரியோ டைட்டில் வின்னர் ஆக மாறினால் இறங்கி விளையாடுபவர்கள் மட்டும் தான் இனிமேல் டைட்டில் வின் பண்ண முடியும் என்ற டிரெண்ட் ஏற்படும் என்றும் அதனால் அடுத்த சீசன் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறுகிறார். இதனை ஆஜித்தும் ஏற்று கொள்கிறார்.
அதேபோல் ஷிவானியிடம் ஆரி விளையாடுவது குறித்து பாலாஜி கூறிய போது ’ஆரிக்கு நல்ல பொறுமையும் புரிதலும் இருக்கின்றது. அவர் கெட்டவர் என்று சொல்லவில்லை, ஆனால் அதே நேரத்தில் அவர் நல்லவரும் இல்லை. அவர் தனது பக்கம் இருக்கும் தவறுகளை மறைப்பதால் அவரை நல்லவர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரி தனக்கு ஒரு விஷயம் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைத்து மற்றவர்களின் தவறுகளை சுட்டி காட்டுகிறார். அவரது நேர்மை அங்கேயே அடிபட்டு விட்டது.
மேலும் ஆரி வேற லெவல் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லோரும் ரம்யா தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உண்மை கிடையாது. அவர் மட்டும் தான் வேற லெவல் பிக்பாஸ் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் ஒருவரை வாழ்த்துவது போன்று இருக்கும், ஆனால் அந்த வாழ்த்திலும் ஒரு பிட்டைப் போட்டு போட்டுவிடுவார். அவருடைய ஆட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் எனக்கு தெரியும் என்பதால் அவரை நல்லவராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த வீட்டிலே யார் டைட்டில் வின்னர் ஆனால் நான் வருத்தப்படுவேன் என்றால் அது ஆரி மட்டும் தான். இதை நான் கமல் சாரிடம் கூட சொல்வதற்கு தயங்கமாட்டேன்’ என்று பாலாஜி கூறியுள்ளது அவருடைய பயத்தை காண்பிப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
According to #Balaji, he won’t accept if #Aari #Rio or #Som win. Is he the only one in his mind or #Shivani or #Aajeedh winning it is ok too? @vijaytelevision @EndemolShineIND #பிக்பாஸ்#BiggBossTamil#BiggBossTamil4 #நானும்_கேட்பேன் pic.twitter.com/L5C9h25lDI
— Suhasi-161 (@Suhasi161) December 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments