சனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவிலும் பட்டிமன்ற காரசார விவாத காட்சிகள் தான் உள்ளது. ‘நம்ம குடும்பமே பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனையைவிடவா அங்க இருக்கிற குடும்பத்துல பிரச்சனை இருக்கபோவுது’ என்று ரியோ கூற, குடும்பம், குடும்பம் குடும்பமாக இருக்கின்றதே தவிர இதுவொரு குடும்பமாக இல்லை என்று சுரேஷ் கூறுகிறார்.
நான் ஜென்ரலா ரொம்ப ரியாக்ட் பண்ணுவேன் என்று சனம்ஷெட்டி கூற, நேற்று ஒரு முதியவரை அவன், இவன் போடா, உனக்கென்ன மரியாதை’ என்று கூறுகிறார் என பாலாஜி அதற்கு பதிலடி கூற, பாலாஜிக்கு பதிலடி தரும் வகையில், ‘யோவ் உனக்கென்ன மூளை குழம்பி போயிடுச்சா, வயசு ஆக ஆக இப்படித்தான் இருக்குமா? என நீயும் தான் சொன்னாய் என்று பாலாஜிக்கு ஜித்தன் ரமேஷ் பதிலடி கொடுக்க இன்றைய பட்டிமன்றம் ஒரே பரபரப்பில் இருந்தது.
அய்யோ இவன் சரி இல்ல, இவன நாமினேட் பண்ணு, தூக்கு, என்பது தான் போட்டி’ என்று சுரேஷ் கூற மொத்தத்தில் இவர்கள் பட்டிமன்றத்தின் தலைப்பு குறித்து பேசினார்களா? அல்லது ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்ட பேசுகிறார்களா? என்பது புரியவில்லை
மொத்தத்தில் அரக்கர்கள் டாஸ்க் போல் இந்த டாஸ்க்கிலும் சண்டை வந்தால் சரி என்று பிக்பாஸ் நினைத்தது வெற்றி பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
#Day18 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/AWXPbdYL1G
— Vijay Television (@vijaytelevision) October 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments