பாலாஜி உண்மையிலேயே மிஸ்டர் இந்தியாவா? பரபரப்பு தகவல் 

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, தான் மிஸ்டர் இந்தியா என்று டாஸ்க் ஒன்றில் கூறினார். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாகவும் அவர் கூறினார். அப்போது சனம் குறிக்கிட்டபோது ’இது உங்கள் நிகழ்ச்சி போல டுபாக்கூர் கிடையாது’ என்று கூறியதை அடுத்து இருவருக்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இதுகுறித்து ஜோ மைக்கல் என்பவர் தனது நிறுவனம் குறித்து பாலாஜி முருகதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையேல் அவருக்கு தங்களது நிறுவனம் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாலாஜி கூறியதுபோல அவர் நடத்தியது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா நிகழ்ச்சி கிடையாது என்றும் அந்த நிகழ்ச்சியின் உரிமையாளரும் பாலாஜி கிடையாது என்றும் கூறினார். மேலும் பாலாஜி பெற்ற மிஸ்டர் இந்தியா பட்டம் கடந்த ஜூன் மாதமே காலாவதி ஆகி விட்டதாகவும் அதன் பின்னரும் அவர் அந்த பட்டத்தை பயன்படுத்தி வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு பக்கம் பாலாஜி தன்னை மிஸ்டர் இந்தியா என்று பிக்பாஸ் வீட்டிற்குள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது மிஸ்டர் இந்தியா சர்ச்சைக்குரிய வகையில் வெளியில் வாக்குவாதம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: கைக்கடிகாரத்தில் வீடியோ எடுத்த நாகர்கோவில் காசி!

காருக்குள் இளம் பெண்ணிடம் அத்துமீறிய நாகர்கோவில் காசி, அதனை கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவு செய்து மிரட்டியதாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதால்

படிக்காமல் இருக்கும் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா??? விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட 19 வயது சிறுமி!

தெலுங்கானா மாநிலத்தில் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத 19 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

90% வெற்றியுடன் புதிய கொரோனா தடுப்பூசி… மக்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்குமா புது அறிவிப்பு?

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறையில் இருக்கும் நடிகைக்காக காத்திருக்கும் படக்குழு!

சமீபத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

எஸ்.ஏ.சி அரசியல் கட்சி விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு

சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் திடீரென தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார்