சுவாரஸ்யமற்ற போட்டியாளர் : பாலாஜியை கட்டம் கட்டிய சக போட்டியாளர்கள்!

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]


பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 41 நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் இன்று 42வது நாளில் முதல் புரமோ வெளியாகியுள்ளது

கடந்த வாரம் சிறந்த போட்டியாளர்கள் மற்றும் மோசமான போட்டியாளர்கள் குறித்த கருத்துகணிப்பு எடுக்கப்படவில்லை என்ற நிலையில் இன்றைய முதல் புரமோவில் சுவாரஸ்யமற்ற போட்டியாளர் என்று தேர்வு செய்யும்படி போட்டியாளர்களிடம் கமலஹாசன் கூறினார்

அதற்கு உடனே ரமேஷ் எழுந்து, சுவாரஸ்யமற்ற போட்டியாளர் பாலாஜி தான் என்றும், கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறினார். இதனை அடுத்து பாலாஜி விளக்கம் கூறுகையில் ’கடந்த வாரம் நடந்த 5 டாஸ்க்கில் 4 டாஸ்க்கில் நான் தான் வெற்றி பெற்றுள்ளேன். ஒரே ஒரு டாஸ்க்கை வைத்து எப்படி என்னை சுவாரஸ்யமற்ற போட்டியாளர் என்று கூறலாம் என்று விளக்கமளிக்கிறார்

பாலாஜி சுவாரஸ்யமற்ற போட்டியாளர் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறீர்களா என்று கமல்ஹாசன் கேட்ட போது சக போட்டியாளர்கள் அமைதியாக இருந்தது ஆச்சரியமே அளிப்பதோடு, யாரும் மறுப்பு தெரிவிக்காததால் அவர் சுவாரஸ்யமற்ற போட்டியாளர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வதாகவே கருதப்படுகிறது

உண்மையில் கடந்த வாரம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது ரமேஷ் தான் என்றும், ஆனால் அவர் தன்னை யாராவது சுவாரஸ்யமற்ற போட்டியாளர் என்று சொல்லிவிடுவார்களோ என முந்திக்கொண்டதாகவும் பார்வையாளர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்.