கட்டிப்பிடித்து அழாமல் வீட்டுக்கு வந்த உறவினரை கலாயத்த பாலாஜி!
- IndiaGlitz, [Tuesday,December 29 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக இன்று முதல் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதலில் ஷிவானியின் தாயார் வந்து அறிவுரை கூறி சென்ற பின் இரண்டாவதாக பாலாஜியின் சகோதரர் வந்திருக்கிறார்
எல்லோரும் ப்ரீஸ் என்று பிக்பாஸ் கூறியவுடன் அனைவரும் அசையாமல் இருக்கும் போது பாலாஜியின் சகோதரர் உள்ளே நுழைகிறார். அப்போது பாலா தனது சகோதரரை பார்த்ததும் ப்ரீஸில் இருந்து ரிலீசாகி அவரை கட்டிபிடிக்கின்றார். ஆனால் அதன் பின்னர் ’உனக்கு போய் நான் அன்ப்ரீஸ் ஆகி விட்டேனே, அதான் கஷ்டமா இருக்கு’ என்று கலாய்க்க, அதற்கு பாலாஜியின் சகோதரர் ’நான் என்ன பிளான் பண்ணி வந்தேன்னா, என்ன பார்த்த உடனே கட்டிப்பிடித்து அழுவன்னு நினைத்தேன்’ என்று கூறி சிரிக்கிறார். மேலும் ‘நான் உன்னை மோட்டிவேஷன் பண்ணலாம் என்று வந்தேன் ஆனால் நீ என்னை அசிங்கப்படுத்திட்டியே’ என்று பாலாஜியின் சகோதரர் பாலாஜி மாதிரி காமெடியாக கமெண்ட் அடித்தார்
மேலும் பாலாஜியிடம் தனியாக ‘ நீ சரியாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறாய்? நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரிதான்’ என்று பாலாஜியை அவர் ஊக்கப்படுத்தும் காட்சியுடன் இன்றைய புரோமோ வீடியோ முடிவடைகிறது
இன்று ஷிவானி, பாலாஜி ஆகியோர்களின் உறவினர்கள் வந்திருக்கும் நிலையில் நாளை முதல் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரியோவின் மனைவி மற்றும் குழந்தை வரும்போது சென்டிமென்ட் உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#Day86 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/mUqZ6oeUCR
— Vijay Television (@vijaytelevision) December 29, 2020