பாலாஜியை கதறி அழவைத்த பிக்பாஸ்: லீக் ஆன வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர் மட்டுமன்றி கரடுமுரடான போட்டியாளர் என்ற விமர்சனம் பாலாஜிக்கு உண்டு. எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் முகத்துக்கு நேரே பேசிவிடுவார் என்பதும் அதன் பின் இமேஜ் பார்க்காமல் அவர்களிடம் மன்னிப்பு கேட்பார் என்பதும் அனைத்து போட்டியாளர்களை விட வித்தியாசமான முறையில் தனித்தன்மையுடன் விளையாடி வருவதாகவும் அவருக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்பாஸ் அவருக்கு கேக் அனுப்பியுள்ளார். தனது பிறந்தநாளின் போது அவர் மிகவும் நெகழ்ச்சி அடைந்து லேசான கண்ணீருடன், ‘இந்த பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, நான் கொஞ்சம் கோபமாக தான் இருப்பேன். ஆனால் உடனே நான் எல்லாவற்றையும் மறந்து விடுவேன். ஒருவேளை நான் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அதற்காக இதோட நிறுத்தி விடுவேன் என்று நினைக்க வேண்டாம். மீண்டும் நான் என்னுடைய வேலையை தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் இது கேம்’ என்று கூறினார்.

பாலாஜியின் பிறந்த நாளை கொண்டாடுவதில் மற்ற போட்டியாளர்களை விட ஷிவானி குஷியில் இருந்தார் என்பதும், கேக்கை வெட்டியவுடன் பாலாஜி, ஷிவானிக்குத்தான் முதலில் ஊட்டினார் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.