நேற்று ஆரியிடம் கிண்டல், இன்று மன்னிப்பு: புரியாத புதிராக பாலாஜி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, ஒரு பெரும் புதிராகவே ஆரம்பத்தில் இருந்து காணப்படுகிறார். முதலில் சில வாரங்களாக மிகுந்த கோபத்துடனும் அதேநேரம் சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் இருந்த பாலாஜி, சில நேரங்களில் சக போட்டியாளர்களிடம் தேவையில்லாமல் மோதல் போக்கையும் கையாண்டார். கமல்ஹாசன் அடுத்தடுத்து கொடுத்த அறிவுரைகள் மற்றும் குறும்படங்கள் காரணமாக திடீரென அவர் நேர்மையாளராகவும் மாறினார்
கேப்டன் டாஸ்க்கில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டும் தன்னுடைய தவறை சுட்டிக்காட்டி தான் இந்த கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெறவில்லை என்றும், தனக்கு அடுத்து வந்த ரம்யா தான் கேப்டன் என்று கூறும் அளவுக்கு அவர் நல்லவராக நடந்து கொண்டார். இதனை அடுத்து கமல்ஹாசன் கூட அவரை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நன்றாக போய்க்கொண்டிருந்த பாலாஜி திடீரென நேற்று ஆரியை பற்றி குறை கூறினார். நான் டைட்டில் பட்டம் வின் செய்வதற்கு தகுதி இல்லை என்று கூறுவதற்கு இவர் யார் என ஆரியை கேலியும் கிண்டலும் செய்தார்
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் ஆரி, ரியோவிடம் பாலாஜி மன்னிப்புக் கேட்கும் காட்சி உள்ளது. அதில் பாலாஜி கூறியபோது ’குறிப்பாக நான் இரண்டு பேர்களிடம் சாரி கேட்க வேண்டும். முதலில் சாரி கேட்பது ஆரியிடம், இரண்டாவது ரியோ. இவங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் சாரி கேட்டு கொள்கிறேன்
இதுவரை நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பார்த்து வந்திருக்கிறீர்கள். ஆனால் நான் இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். எனக்கு அந்த அளவுக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. நம்மில் பெரும்பாலானோர் கீழே இருந்துதான் மேலே வந்திருக்கின்றோம். நாம் ஒருத்தரை ஒருத்தர் கை கொடுத்து தூக்கி விடுவதை விட்டுவிட்டு, கீழே இழுத்து விடுற மாதிரி எனக்கு தோன்றியது. எனவே நான் இந்த இரண்டு பேர்களையும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
பாலாஜியிடம் மனமாற்றம் இருந்தாலும் மீண்டும் அவர் பழையபடி மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments