பாலாஜி-ஷிவானி காதலின் ரகசியத்தை உடைத்த சுசி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்த காட்சிகள் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த காதல் வழக்கம்போல் முந்தைய சீசன்களில் இருந்த செட்டப் காதல் தான் என்பதை நெட்டிசன்கள் ஒருசில நாட்களிலேயே தெரிந்து கொண்டனர். தெய்வீகக்காதல் என்று காண்பிக்கப்பட்ட கவின் - லாஸ்லியா காதல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என்ன ஆயிற்று என்று தெரிந்த பார்வையாளர்களுக்கு பாலாஜி-ஷிவானி காதல் குறித்து தெரியாமல் போகுமா?
இந்த நிலையில் பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் பாலாஜி-ஷிவானி காதல் போலியானது என்றும், செயற்கையாக இருப்பதாகவும் கருத்து கூறினர். குறிப்பாக ரம்யா பாண்டியன், பாலாஜி-ஷிவானி காதல் குறித்த அடித்த கமெண்ட் நகைச்சுவையானது மட்டுமின்றி உண்மையானதும் கூட.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்து ஒரு மீம்ஸை பதிவு செய்து அதற்கு ‘சூப்பர்’ என கமெண்ட் அளித்துள்ளார்.
கடந்த வார நாமினேஷனின்போது ‘காதல் கண்ணை மறைக்குது’ என்று ஆரி சொல்ல, உடனே தனக்கு காதலும் இல்லை ஒன்றும் இல்லை என பாலாஜி ஒப்புக்கொண்டதை தான் சுசி ‘சூப்பர்’ என குறிப்பிட்டிருந்தார். பாலாஜியே காதல் இல்லை என்று கூறியதை அடுத்து காதலின் ரகசியம் உடைந்ததாக கருதப்படுகிறது
முன்னதாக கமலிடம் சுசி பேசியபோது, ‘ரியோ, அர்ச்சனா, நிஷா ஆகியோர்களுக்கு இரண்டு முகம் உண்டு என்றும், ஒன்று கேமிரா முன், இன்னொன்று கேமிராவுக்கு பின் என்றும் அவர்களுடைய இரட்டை வேடத்தையும் தோலுரித்தார்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments