கெத்து காட்டிய பாலாஜி, உசுப்பிவிட்ட அர்ச்சனா, பலியாடான வேல்முருகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி சுவராசியமாக இருந்தது. ஆரம்பத்தில் அனிதாவின் அழுகை சற்று போரடித்தாலும் அதன்பின் தங்கச்சுரங்கம் டாஸ்க் ஆரம்பித்தபின் சுறுசுறுப்பாக இருந்தது
இந்த நிலையில் நேற்று கடைசி பத்து நிமிடங்கள் பாலாஜி கெத்து காட்டிய காட்சிகள் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. நேற்று பாலாஜி தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டை பெருக்க வேண்டும் என்று வேல்முருகனை அர்ச்சனா உசுப்பேத்திவிட்டார், அவர் அர்ச்சனாவின் தொல்லை தாங்காமல் பாலாஜி எழுப்புவதற்கு முயன்றார். ஆனால் பாலாஜியோ தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தூங்கி கொண்டிருப்பதாகவும் பின்னர் பெருக்கலாம் என்றும் கூறினார்
இதனை அடுத்து வேல்முருகன் தனது டீமுடன் சேர்ந்து வீட்டை பெருக்கி கொண்டிருந்தார். அப்போது அர்ச்சனா வேல்முருகனுக்கு உதவி செய்வது போல் வந்து, பாலாஜியை எழுப்ப சொல்லுங்கள் மீண்டும் உசுப்பேற்றினர். இதனை அடுத்து வேல்முருகன் மீண்டும் பாலாஜியை எழுப்ப, பாலாஜி சற்று கோபம் அடைந்து இதற்கு காரணம் அர்ச்சனா என்பதை புரிந்து கொண்டு அவரை ஜாடைமாடையாக பேசியபடி வேண்டா வெறுப்பாக வீட்டை பெருக்கினார்.
மேலும் அடுத்த வாரம் நான் கேப்டன் ஆகிவிட்டால் எல்லோரையும் அம்மி அரைக்க வைப்பேன் என்று அவர் கூறியது, அர்ச்சனாவுக்கும் அவரது குரூப்பில் உள்ளவர்களான ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் ஆவேசமடைந்தனர்.
அம்மி அரைக்க வைப்பேன் என்று எப்படி சொல்லலாம் என ரியோ, அர்ச்சனா கொதித்து எழுந்து பாலாஜியை கேள்வி கேட்க, அதற்கு அனைவருக்கும் அசால்டாக எந்தவித டென்ஷனும் இன்றி தான் எதுவும் தவறாக சொல்லவில்லை என பாலாஜி கெத்தாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்
பாலாஜியின் கெத்தான பதில் ரியோ, அர்ச்சனா குரூப்பை மேலும் ஆத்திரமூட்டியது. மொத்தத்தில் நேற்று அர்ச்சனாவும் அவரது குரூப்பும் பாலாஜியை டார்கெட் செய்த போதிலும் அவர் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அடையாமல் கெத்து காட்டியது ரசிக்கும் வகையில் இருந்தது. அர்ச்சனாவின் உசுப்பேற்றலால் வேல்முருகன் நேற்று பலியாடானது தான் சோகத்திற்கு உரியது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout