இந்த வாரம் ஜெயிலில் இருந்து தப்பிப்பாரா பாலா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இந்த டாஸ்க்கில் ‘பாட்டியை அதிகமாக சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல், சரியான திசையில் பயணம் செய்து முறையாக டாஸ்க்கை முடிக்காமல் நீங்கள் அனைவரும் தவறி விட்டீர்கள்’ என்று பிக் பாஸ் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இந்த டாஸ்க்கை சரியாக செய்யாததால் போட்டியாளர்களுக்கு பூஜ்ஜியம் லக்சரி பட்ஜெட் என்ற அறிவிப்பையும் பிக்பாஸ் வெளியிட்டார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பிக்பாஸ் பேசிக்கொண்டிருந்தபோது, பாலாஜி ’அந்த டாஸ்க்கில் சொத்து பத்திரத்தை நான் எடுக்கவில்லை’ என பாலா கூறினார். அப்போது பிக்பாஸ் பாலாவிடம் ’இந்த டாஸ்க்கை நீங்கள் முறையாக செய்ய தவறி விட்டீர்கள்’ என்று கண்டனம் தெரிவித்ததோடு, ’முதலில் முழுசாக டாஸ்க்கை புரிந்துகொண்டு அதன் பின் விளையாடுங்கள்’ என்று கூறினார்.

இந்த வாரம் ஒருசிலர் போட்டியாளர்களின் அதிருப்தியை பெற்ற பாலாஜி, பிக்பாஸின் கண்டனத்தையும் பெற்றுள்ளதால் இந்த வாரம் அவர் சிறைக்கு தள்ளப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த வாரமே சிறைக்கு சென்றிருக்க வேண்டிய பாலாஜி அதிர்ஷ்டவசத்தால் தப்பித்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.;

More News

இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரானின் 6 வயது மகன்! குவியும் வாழ்த்துக்கள்!

சற்குணம் இயக்கிய 'வாகை சூட வா' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம்,

அசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி!

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின்  ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி

18 மணிநேரம் பேக்கப்பா ??? அசத்தும் புதிய லேப்டாப் அறிமுகம்!!!

கொரோனா காலத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களின் பயன்பாடு ரொம்பவே அதிகரித்து விட்டது.

கொரோனா காலத்தில் கோவிலை மட்டும் ஏன் திறக்குறீங்க… இந்த ஒரு கேள்விக்கு மரணத் தண்டனையா???

கொரோனா காலத்தில் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறந்திருப்பது ஏன் எனக் கேள்விகேட்ட தடகள வீரருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படலாம்

'இரண்டாம் குத்து' டீசரை நீக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக