என்ன ஆச்சு பாலாவுக்கும் கேபிக்கும்: மாறி மாறி கூறி வரும் புகார்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வரும் நிலையில் இறுதிப்போட்டி கிட்டத்தட்ட நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே. இனிவரும் நாட்களில் ஹவுஸ்மேட்ஸ்கள் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலா மற்றும் கேபி ஆகிய இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது. கேபி இது குறித்து கூறும்போது ’நான் ஓபன் ஆக இதுவரை பேசியதே இல்லையா? அப்படி இருந்ததால்தான் நான் கமல் சாரிடம் ஸ்டாட்டர்ஜி பற்றி கூறினேனா? நான் ஓப்பனாக பேசியதால் தான் என்னை குத்தியிருக்கான்’ என்று கூறுகிறார்.
இதையடுத்து அடுத்த காட்சியில் ஆஜித்திடம் பாலாஜி கூறியபோது, ‘கேபியிடம் நான் ஒரு விஷயம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அர்ச்சனா அக்கா பண்ணியது உண்மையா? போலியா? என்று தெரியவில்லை, சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லி இருந்தேன், இது எனக்கும் கேபிக்கும் நடந்த ஒரு பர்சனல் உரையாடல்.
இதை கேட்டு அர்ச்சனா கிட்ட போய் சொன்னது தான் பின்னாடி பேசுறது. இப்ப சொல் பின்னாடி பேசியது யாரு? நானா? கேபியா? என்று ஆஜித்திடம் பாலாஜி புலம்புகிறார். இந்த இருவரும் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் கூறிக் கொண்டிருப்பதால் இருவருக்கும் விரைவில் மீண்டும் ஒரு பிரச்சனை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
#Day85 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/5eUqxgxaKZ
— Vijay Television (@vijaytelevision) December 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout