'விக்ரம் வேதா' பின்னணி இசையில் கொஞ்சும் பாலா-ஆரி!

பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட முதல் நாள் முதல் ஆரியும் பாலாவும் ’விக்ரம் வேதா’ படத்தில் வரும் விஜய்சேதுபதி, மாதவன் போல் மோதிக்கொண்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென இன்று வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இருவரும் கொஞ்சும் காட்சிகள் உள்ளன.

தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் ப்ரிஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகையின்போது மட்டுமின்றி மற்ற நேரங்களில் பிக்பாஸின் ‘ப்ரீஸ்’ குரல் கேட்டவுடன் சம்பந்தப்பட்டவர்கள் ப்ரீஸ் ஆக நிற்கும் காமெடி காட்சிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய அடுத்த வீடியோவில் பாலா சாப்பிட்டு கொண்டிருக்கும்போது திடீரென பிக்பாஸ் பாலாவை ப்ரீஸ் என்கிறார். இதனையடுத்து பாலா அசையாமல் உட்கார்ந்திருக்கும்போது அங்கு வரும் ஆரி அவரை கிண்டல் செய்கிறார். பாலாவின் கன்னத்தை பிடித்து ஆரி விளையாடும்போது திடீரென ’ஆரி ப்ரீஸ்’ என பிக்பாஸ் குரல் கேட்பதை அடுத்து அவரும் ப்ரீஸ் ஆகிறார்.

‘இரண்டு சண்டக்கோழிகள் கொஞ்சிகிட்டு இருக்காங்க’ என இதனைப் பார்த்து ரம்யா கேலி செய்வதும் பின்னணியில் ’விக்ரம் வேதா’ பின்னணி இசை ஒலிப்பதும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.