இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா? சமூக வலைத்தளங்களின் வாக்கெடுப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷனில் மொத்தம் ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் தலைவர் ரம்யா மற்றும் பாலாஜி, கேபி ஆகிய மூவரைத் தவிர மற்ற 7 பேர் அதாவது ஆரி, ரியோ, ஷிவானி, அனிதா, சோம், ஆஜித் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து கொண்டிருந்த அர்ச்சனா தற்போது நாமினேஷனில் சிக்கி உள்ளதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று சமூக வலைதள பயனாளிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது ஏற்கனவே ஹாட்ஸ்டார் செயலியில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் தனியாக ஒரு வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஹாட்ஸ்டார் வாக்கெடுப்பின் பிரதிபலிப்பாக இந்த வாக்கெடுப்பு கருதப்படும் நிலையில் இந்த வாக்கெடுப்பில் தற்போது அர்ச்சனாவுக்கு தான் மிக குறைந்த வாக்குகள் கிடைத்து இருப்பதாக தெரிகிறது
மிக அதிகபட்சமாக ஆரிக்கும், அவரை அடுத்து ரியோ, ஷிவானி, அனிதா ஆகியோர்களுக்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த வாக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அர்ச்சனாவுக்கும் அஜித்துக்கும் மிகக்குறைந்த வித்தியாசம் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் அர்ச்சனா வெளியேறினால் அன்பு குரூப் முழுமையாக உடைந்து அவரவர் தனித்தனித் தன்மையுடன் விளையாடுவார்கள் என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com