யார் யாரை நாமினேட் செய்தார்கள்? கணக்கெடுத்த அர்ச்சனா-ரியோ!

பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் படலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அன்பு குரூப்பில் உள்ள அர்ச்சனா, ரியோ, சோம் ஆகிய மூவருமே நாமினேஷனில் சிக்கியுள்ளனர் என்பது தெரிய வருகிறது

நாமினேஷன் முடிந்ததும் இதுகுறித்த கணக்கெடுப்பு ஒன்றை அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோர் கார்டன் ஏரியாவில் படுத்து கொண்டே எடுக்கின்றனர். அப்போது ஆரி நாமினேட் செய்தது ரியோவை என்றும், அனிதா நாமினேட் செய்தது ரியோ மற்றும் சோம் என்றும், ஷிவானி நாமினேட் செய்தது சோம், ரியோ என்றும், பாலா நாமினேட் செய்தது ரியோ மற்றும் அர்ச்சனா என்றும், ரம்யா நாமினேட் செய்தது ரியோ மற்றும் அர்ச்சனா என்றும் கணக்கெடுக்கின்றனர்.

இந்த கணக்கெடுக்குப்புக்கு பின்னர் குரூப்பிஸம் எங்கே இருக்கின்றது? நம்பர் கேம் எங்கே இருக்கின்றது என்பது புரிகின்றதா? என்று அர்ச்சனா கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் அனிதா, ஆரி, பாலாவை நாமினேட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் இந்த வாரம் அர்ச்சனா, ரியோ, சோம் ஆகிய மூவருமே நாமினேஷனில் இருப்பது போல் தெரிவதால் அன்பு குரூப்பில் இன்னொரு விக்கெட் விழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்