சோமுவுடன் சேர்ந்து பிக்பாஸ் விதிகளை மீறிய அர்ச்சனா: வீடியோ ஆதாரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் இயங்கி வருகிறது என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது.
தாங்கள் எந்த குரூப்பும் இல்லை என்று அர்ச்சனா குரூப் சொல்லிக் கொண்டு வந்தாலும் அதை யாரும் இனி நம்ப போவதில்லை. இந்த நிலையில் அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் இயங்கி வருவது மீண்டும் நிரூபிக்கப்படும் வகையில் தற்போது நெட்டிசன்களின் வீடியோ ஆதாரம் ஒன்று வைரலாகி வருகிறது.
அர்ச்சனா, சோம், நிஷா மற்றும் ரியோ ஆகிய நால்வர் டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சோம் மற்றும் அர்ச்சனாவின் மைக்குகளை அர்ச்சனா மறைத்து ரகசியமாக பேசுகிறார்.
அந்த நேரத்தில் அனிதா அந்த பக்கம் நடந்து வரும்போது உடனே சோம் மற்றும் தன்னுடைய மைக்கை அர்ச்சனா சரி செய்து சாதாரணமாக உட்கார்ந்திருப்பது போன்று இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதிகளில் ஒன்று மைக்கை மறைக்கக்கூடாது என்பதுதான். ஆனால் பிக்பாஸ் விதிகளை மீறி சோமுவுடன் சேர்ந்து அர்ச்சனா மைக்கை மறைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தது விதிமீறல் ஆகும். இந்த விதிமீறலுக்கு பிக்பாஸ் என்ன தண்டனை கொடுப்பார்? இதனை கமல்ஹாசன் கண்டிப்பாரா? என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil4 தன் கைகளால் MIC மூடிக்கொண்டு பேசும் அர்ச்சனா அனிதா வந்தவுடன் மைக்கை SOM ku தானும் மாற்றிக் கொள்ளும் காட்சி...Ethu bigg boss rule break... Archana ethu tha un anbu game ah pic.twitter.com/iwxcPFna5f
— TamilCinema⛤ (@tamilcinemaYT) November 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments