சோமுவுடன் சேர்ந்து பிக்பாஸ் விதிகளை மீறிய அர்ச்சனா: வீடியோ ஆதாரம்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் இயங்கி வருகிறது என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. 

தாங்கள் எந்த குரூப்பும் இல்லை என்று அர்ச்சனா குரூப் சொல்லிக் கொண்டு வந்தாலும் அதை யாரும் இனி நம்ப போவதில்லை. இந்த நிலையில் அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் இயங்கி வருவது மீண்டும் நிரூபிக்கப்படும் வகையில் தற்போது நெட்டிசன்களின் வீடியோ ஆதாரம் ஒன்று வைரலாகி வருகிறது. 

அர்ச்சனா, சோம், நிஷா மற்றும் ரியோ ஆகிய நால்வர் டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சோம் மற்றும் அர்ச்சனாவின் மைக்குகளை அர்ச்சனா மறைத்து ரகசியமாக பேசுகிறார்.

அந்த நேரத்தில் அனிதா அந்த பக்கம் நடந்து வரும்போது உடனே சோம் மற்றும் தன்னுடைய மைக்கை அர்ச்சனா சரி செய்து சாதாரணமாக உட்கார்ந்திருப்பது போன்று இருக்கின்றார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதிகளில் ஒன்று மைக்கை மறைக்கக்கூடாது என்பதுதான். ஆனால் பிக்பாஸ் விதிகளை மீறி சோமுவுடன் சேர்ந்து அர்ச்சனா மைக்கை மறைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தது விதிமீறல் ஆகும். இந்த விதிமீறலுக்கு பிக்பாஸ் என்ன தண்டனை கொடுப்பார்? இதனை கமல்ஹாசன் கண்டிப்பாரா? என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

நிஷாவுடன் ரமேஷை கோர்த்துவிடும் ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வெளியே தெரியாமல் இருந்த குரூப்பிஸம் இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. குறிப்பாக கால் சென்டர் டாஸ்க்கில் பாலாஜி வெளிப்படையாக

ரியோ-சனம் குரூப்பிஸ சண்டை: விழுந்து விழுந்து சிரித்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாக போட்டியாளர்களிடையே சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக ஆரி-பாலாஜி, ஆரி-சம்யுக்தா, பாலாஜி-அர்ச்சனா,

2015 ஐ நினைவுப்படுத்துமா செம்பரபாக்கம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களும் தற்போது நிவர் புயலின் காரணமாக விரைந்து நிரம்பி வருகிறது.

திறக்கப்படுகிறது செம்பரப்பாக்கம் ஏரி: 2015 திரும்புமா?

வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு: நிவர் குறித்து கவிப்பேரரசு கவிதை!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது