நிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வரும் வரை நிஷா தன்னுடைய தனித்திறமையை காண்பித்து விளையாடி கொண்டிருந்த நிலையில் அர்ச்சனா வந்த சில நாட்களிலேயே அவர் டம்மியாக்கப்பட்டு அன்பு குரூப்பால் ஆஃப் செய்யப்பட்டார். அதன்பின்னர் நிஷாவின் காமெடிகளும் விளையாட்டும் பெரியதாக ரசிக்கப்படவில்லை. இதனை பாலாஜி, அனிதா, சனம் உள்ளிட்டோர் நேரடியாகவே பலமுறை கூறிவிட்டனர்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா, ரமேஷ், சோம் மற்றும் ரியோ ஆகியோர் நிஷாவை குறித்து பேசுகின்றனர். இதில் நிஷா மொக்கை காமெடி செய்து வருவதாகவும், தானே தன்னை தாழ்த்தி கொள்வதாகவும் பேசி வருகின்றனர். மேலும் ஒரு முறை, இருமுறை என்றால் பரவாயில்லை, மூன்றாவது முறை அவராகவே புரிந்து நடந்து கொள்ள வேண்டாமா, எப்போது தான் அவருக்கு தெரிய வரும் என ஜித்தன் ரமேஷ் கூறுகின்றார்.

இதில் அர்ச்சனா, அவர் சொல்ற நகைச்சுவை நன்றாக இருந்தால் கேளுங்கள், இல்லையென்றால் போய்விடுங்கள், நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொன்னால் அவருடைய அடுத்த ஐந்தாறு வருட கேரியர் பாதிக்கும் என்று கூறுகின்றார். இந்த உரையாடலை ரியோ, சோம் அமைதியாக பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொரு பக்கத்தில் நிஷாவுக்கு வழக்கம்போல் ஆரி தனது அறிவுரைகளை வழங்கி வருகிறார். மொத்தத்தில் அர்ச்சனாவின் ல்வ்-பெட் குரூப் நிஷாவால் உடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

More News

டெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி!!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை!!!

சென்னை அடுத்த பொன்னேரி பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்!!!

ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளி சுப்பிரமணியம். இவருடைய 5 வயதில் முதல் முறையாக பாம்பு கடித்தது எனக் கூறுகிறார்.

'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்தார் 

கோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா??? முடிவுக்கு வரவிருக்கும் விவாதம்!!!

தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில் கும்பாபிஷேகங்களிலும் இனி தமிழ் பாடல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்