பாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!
- IndiaGlitz, [Monday,November 30 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா என்ட்ரி ஆகும் வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த போட்டியாளர்கள் அர்ச்சனாவின் வரவிற்குப் பின்னர் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு குரூப் ஆக ஒருசிலர் மாறினார்கள். அர்ச்சனாவும் தனது அன்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஒரு குழுவை உருவாக்கி மற்ற போட்டியாளர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வருவது பார்வையாளர்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று கமலஹாசன் முன்னிலையில் பாலாஜி பேசியபோது ’அர்ச்சனாவின் குரூப் குறித்து அழுத்தமாக பதிவு செய்ததோடு, இந்த வாரம் நாமினேட் ஆகவேண்டும் என்றால் அன்பு குரூப்பில் உள்ள யாராவது ஒருவரை டார்கெட் செய்தால் போதும், நாளை கண்டிப்பாக நாமினேட் செய்யப்படுவீர்கள் என்று கூறினார்.
அவர் சொன்னது போலவே நேற்று ரியோவின் கேப்டன்ஷிப் குறித்த ஸ்டார் வழங்கும் டாஸ்க்கில் ஒரு ஸ்டார் கூட ரியோவுக்கு வழங்க எனக்கு மனமில்லை என்று ரம்யா கூறியதோடு கடைசியில் போனால் போகிறது என்று ஒரே ஒரு ஸ்டார் மட்டும் வழங்கினார்.
இதனை அடுத்து பாலாஜி சொன்னது போலவே இன்றைய நாமினேஷனின்போது, அர்ச்சனா குரூப்பில் உள்ள நிஷா, ரமேஷ், ரியோ உள்பட அனைவரும் ரம்யாவை நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி சொன்னது கச்சிதமாக பலித்ததுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. இதுகுறித்த குறும்படங்களை கமல்ஹாசன் போட்டு அர்ச்சனா குரூப்பின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கமல்ஹாசன் போட மறந்த குறும்படங்களை தற்போது நெட்டிசன்கள் பதிவு செய்து கிழிகிழிவென கிழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து அர்ச்சனா குரூப் 100% இருப்பது உறுதி செய்யப்படுவதோடு, ஒருசில போட்டியாளர்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விளையாட்டின் தன்மையை மாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிக்பாஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கமலஹாசனாவது அன்பு குரூப்பின் மீது சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே பார்வையாளர்களை விருப்பமாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பாலாஜி தந்திரமாக அன்பு குரூப்பில் உள்ள ரியோவுக்கு ஐந்து ஸ்டார்கள் கொடுத்து நாமினேஷனில் இருந்து தப்பித்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Balaji words comes true pic.twitter.com/7gGICYctcv
— TamilCinema⛤ (@tamilcinemaYT) November 30, 2020