கன்பெக்சன் அறையில் கதறி அழும் அர்ச்சனா: ஸ்பெஷல் பவரை பெற நாடகமா?
- IndiaGlitz, [Wednesday,December 16 2020]
பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் கோழிப்பண்ணை டாஸ்க், லக்சரி பட்ஜெட் டாஸ்க் மட்டுமின்றி அதில் வெற்றி பெறும் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார். எனவே அந்த ஸ்பெஷல் பவரை பெற்று நாமினேஷன் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷத்துடன் விளையாடுகிறார்கள். இதனால் அன்பு எல்லாம் காணாமல் போய், போட்டி ஒன்று மட்டுமே ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது
இதனால் ஒருவருக்கொருவர் ஆவேசமாக விளையாடி வருவதால் முட்டல் மோதல் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவின் முட்டையை சோம் எடுத்த போது அந்த முட்டை உடைந்து விட்டதாக அர்ச்சனா குற்றம் சாட்டினார். ஆனால் சோம் தான் உடைக்கவில்லை என்று இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி நிலையில் தற்போது அடுத்த வீடியோ வெளியாகியுள்ளது
இந்த வீடியோவில் அர்ச்சனா கன்பெக்சன் அறையில் பிக்பாஸிடம் குறை கூறி கதறி அழுகிறார். அவர் சோம் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கும் காட்சிகளும், சோகத்தோடு உட்கார்ந்து இருக்கும் காட்சிகளும் ஒரு கட்டத்தில் கன்பெக்சன் அறையில் கதறி அழும் காட்சிகளும் உள்ளன
இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஸ்பெஷல் பவரை பெறுவதற்காக அர்ச்சனா நாடகமாடுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இன்றைய டாஸ்க்கின் போது உண்மையில் என்ன நடந்தது? யார் மீது தவறு? என்பதை இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்