ரியோவை அடுத்து அர்ச்சனாவின் வாயை அடைத்த அனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் எல்லாமே கடைசியில் சண்டையில் தான் முடிகிறது. குறிப்பாக லவ்பெட் குரூப்பிற்கும் தனித்திறமையுடன் விளையாடும் ஒருவருக்கும் சண்டை வருவதும் இதனால் லவ்பெட் குரூப், அந்த தனித்திறமையாளரை டார்கெட் செய்து வெளியேற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது
அந்த வகையில் இந்த வாரம் நடந்த புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் லவ்பெட் குரூப்பை கதற வைத்து கொண்டிருப்பவர் அனிதா. அனிதாவுக்கு துணையாக யாரும் வராதபோதிலும் தனியொருவராக தனது தரப்பு நியாயத்தையும் லவ்பெட் தரப்பு ஆதிக்கத்தையும் தோலுரித்து வருகிறார்
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் சரியான பாயிண்டுகளை சுட்டிக்காட்டி ரியோவின் வாயை அடைத்த அனிதா, இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவின் வாயையும் அடைத்துள்ளார். நான் அழுததால் போரிங் என அனிதா கூறியதாகவும், அதற்கு விளக்கம் கொடுக்க வந்த அர்ச்சனாவிடம் ’நீங்களே சீரியஸ் ஆகும் அளவுக்கு நிஷா பேசியுள்ளார் என்றால் அவர் இந்த வாரம் சிறந்த போட்டியாளரா? என அனிதா கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் நிற்கிறார் அர்ச்சனா.
அனிதாவின் இந்த போராட்டத்திற்கு ஆரி, பாலாஜி சப்போர்ட் செய்தால் லவ்பெட் குரூப் அடங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது
#Day68 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/fWqNX57lzY
— Vijay Television (@vijaytelevision) December 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout