நீங்க எப்படி என்கிட்ட இப்படி சொல்லலாம்? வெடித்தது அர்ச்சனா-ஆரி மோதல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நுழைந்தது முதல் நாட்டாமைத்தனம் செய்து வருகிறார் என்பதும் அவரது டாமினேஷன் சில சமயங்களில் அத்துமீறி இருப்பதாக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. கமல்ஹாசனே கூட உங்களுடைய ஆங்கர் வேலையை பிக்பாஸ் வீட்டில் செய்ய வேண்டாம் என நாசுக்காக அர்ச்சனாவுக்கு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் ரியோ, நிஷா தவிர ஒவ்வொருவரிடமும் வரிசையாக சண்டை போட்டு வரும் அர்ச்சனா, இன்று ஆரியிடம் மோதுகிறார். நான் சாப்பாடு வைக்கும் போது என்னிடம் நீங்கள் போய் உட்காருங்கள், நான் சாப்பாடு வைக்கிறேன் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? என்று ஆரி வாதாட, அதற்கு அர்ச்சனா திணறியபடியும் திசைதிருப்பியும் பதிலளித்து வருகிறார்
அர்ச்சனா-பாலாஜி மோதல் போல் இந்த மோதலும் மிகப்பெரிய அளவில் பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் என தெரிகிறது. அர்ச்சனாவின் ஆதிக்கம் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வருவது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்றே கருதப்படுகிறது
#Day26 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/xPYlMq2KQy
— Vijay Television (@vijaytelevision) October 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments